search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகை முன்னிட்டு  கடலூர், பண்ருட்டி பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
    X

    பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது 

    பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கடலூர், பண்ருட்டி பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×