search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
    X

    நகராட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

    • சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.
    • நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஹரிஹரன் முன்னிலை வகித்தார். இதில் இலவச மின்சாரத்தை விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும், 1000 யூனிட்டிக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட் மின்சாரத்திற்கு 50 சதவீத மின் கட்டணத்தை குறைத்தும் வழங்கி உத்தரவிட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த முதல்-அமைச்சருக்கும், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், கைத்தறி துறை அமைச்சர் காந்திக்கும், சங்கரன்கோவில் பகுதியில் மிக பிரதான தொழிலான விசைத்தறி தொழிலுக்கு உள்ள தேவைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×