என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்தில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • அவர்களுக்கு நத்தம்விசுவநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டுவில் அண்ணா பிறந்த நாளையொட்டி நிலக்கோட்டைதொகுதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு நகர செயலாளர் பீர்முகமது, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பாண்டிராதா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குமார் ஆகியோர் வரவேற்றார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம்விசுவநாதன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழிசேகர், தலைமைக் கழகப் பேச்சாளர் பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    அவர்களுக்கு நத்தம்விசுவநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் தண்டபாணி, சேகர், ராஜசேகரன், மாசாணம், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தட்டிமுருகன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அறிவி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திலிப் குமார், மாவட்ட மாணவரணி பொருளாளர் வெங்கடேஷ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மார்க்ஆலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மைபிரிவு துணை செயலாளர் ஜான் நன்றி கூறினார்.

    Next Story
    ×