search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே பலத்த காற்றில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
    X

    லட்சுமிபுரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி மற்றும் சொந்த பணத்தையும் மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

    விளாத்திகுளம் அருகே பலத்த காற்றில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

    • நேற்று சேதமடைந்த வீடுகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • தமிழக அரசு சாா்பில் பேரிடர் மேலாண்மை இயற்கை இன்னல்கள் திட்டத்தில் சேதமடைந்த 11 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.4,100 வீதம் 11 போ்களுக்கு வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே காடல்குடி குறுவட்டத்திற்கு உட்பட்ட லெட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 29-ந் தேதி சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதனால் அங்கு உள்ள இருளன், முனியசாமி, ஆறுமுகம், மாரியம்மாள், ஜெபமாலை, ராமசாமி, முருகேசன், சண்முகத்தாய், மகாலட்சுமி, முனியசாமி ஆகிய 11 பேரின் வீடுகள் சேதமடைந்தது.

    இதனையடுத்து நேற்று சேதமடைந்த வீடுகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தொடர்ந்து, தமிழக அரசு சாா்பில் பேரிடர் மேலாண்மை இயற்கை இன்னல்கள் திட்டத்தில் சேதமடைந்த 11 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.4,100 வீதம் 11 போ்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 11 பேர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் உதவி தொகையாக தனது சொந்த பணத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், காடல்குடி ஆா்.ஐ. ஆண்டாள்,

    கிராம நிர்வாக அலுவலர் ரவி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×