என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்
  X

  முதல்வர் ஸ்டாலின்

  செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

  சென்னை:

  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

  இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

  இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். போட்டியின் போது சென்னையை ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், செஸ் சென்னை 2022-ன் தொடக்க விழாவின் போது காட்டப்பட்ட பிரம்மாண்டம் மற்றும் காட்சிப் புத்திசாலித்தனத்தில் நான் இன்னும் மூழ்கி இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ராஜ்பவன், மத்திய மந்திரி அனுராக்தாகூர், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒரு அற்புதமான நிகழ்வை இவ்வளவு குறுகிய காலத்தில் எடுத்ததற்காக சென்னையின் புகழ்பெற்ற வரலாற்றில் இன்று பொறிக்கப்படும். இது சிங்கார சென்னை 2.0 உலக அரங்கில் நடை, சிறப்பு, ஆவேசம் மற்றும் கம்பீரத்துடன் தனது வருகையை அறிவிக்கிறது. அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். போட்டியின் போது சென்னையை ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  Next Story
  ×