என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில் ஒரே மாதத்தில் 4 இடங்களில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்
    X

    அரூரில் ஒரே மாதத்தில் 4 இடங்களில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்

    • மாரியம்மன் சிலை மீது வைக்கப்பட்டிருந்த 3.7 கிலோ எடை கொண்ட வெள்ளி கிரீடம் திருடப்பட்டன.
    • மேலும் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.30,000 திருடப்பட்டன.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள், மூடப்பட்டு இருந்த இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மாரியம்மன் சிலை மீது வைக்கப்பட்டிருந்த 3.7 கிலோ எடை கொண்ட வெள்ளி கிரீடம் திருடப்பட்டன.

    மேலும் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.30,000 திருடப்பட்டன.

    இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பின்பு தடவியல் துறையினரை வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தில் உள்ள மற்றொரு மாரி யம்மன் கோவிலில் திருடு போனது.

    அதில் உண்டியல் மட்டும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கத்தை மட்டும் எடுத்துச் சென்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு திருட்டு நடைபெற்றுள்ளதால் இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×