என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-ந்தேதி தென்காசி வருகை - பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
- 4-ந்தேதி மதுரையில் இருந்து தென்காசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.
- தென்காசியில் உள்ள இசக்கி மகாலில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தென்காசி:
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
இதற்காக 4-ந்தேதி மதுரையில் இருந்து தென்காசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் (5-ந்தேதி) காலை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் தென்காசியில் உள்ள இசக்கி மகாலில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அவர் தி.மு.க. நிர்வாகி களிடம் ஆலோசனை நடத்து கிறார்.
ஏற்பாடுகள் தீவிரம்
அவரது வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.






