search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

    • சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    எனவே மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறன் மேம்படுத்தப்பட்ட புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு மின்தடை தொடர்பான புகார் அழைப்புகள் குறைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×