என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அனைத்து தலைவர்கள் சிலைகளிலும் கியூஆர் கோடு பொருத்தப்படும்- அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
  X

  அனைத்து தலைவர்கள் சிலைகளிலும் 'கியூஆர்' கோடு பொருத்தப்படும்- அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புத்தகங்கள் நூலகங்களுக்கு கொண்டு வருவது நிதி நிலைக்கு ஏற்ப பரிசிலீனை செய்யப்படும்.
  • முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும்

  சென்னை:

  தலைவர்களின் சிலைகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள் கிடைக்க அரும்பாடுபட்ட தமிழ்தாத்தா உ.வே.சா.வுக்கு தமிழகம் முழுவதும் திரு உருவச்சிலைகள் அமைக்க வேண்டும்.

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள், அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் என அவருக்கு சிலை அமைக்க வேண்டும் எனவும் கே.பி. முனுசாமி கேட்டுக்கொண்டார்.

  அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் தாத்தாவுக்கு சிலை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், உறுப்பினரின் கோரிக்கை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் என பேசினார்.

  தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழ்த் தாத்தா சிலை அமைக்கும் இடத்தில் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டினை வருங்காலத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் பதிக்க வேண்டும்.

  அவருடைய புத்தகங்களை நூலாக தொடுத்து அனைத்து நூலகங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், புத்தகங்கள் நூலகங்களுக்கு கொண்டு வருவது நிதி நிலைக்கு ஏற்ப பரிசிலீனை செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளிலும், நினைவு இல்லங்களிலும் கியூ.ஆர். கோடு பொருத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

  முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

  Next Story
  ×