search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்

    • தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பால் வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலை வகித்தனர்.

    மேலும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் எந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களும், ஆவின் நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம், நறுமண பால், தயிர், மோர் மற்றும் பால்பவுடர் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பாலகத்தின் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையத்திற்கு மாவட்டத்திலுள்ள 444 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாள் ஒன்றிற்கு 50,000 லிட்டர் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு, மதுரை மற்றும் பிற மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டுக் கடன் உதவிகளும், ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன் உதவிகளும், ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பிலான தீவன விதைகளுக்கான கடன் உதவிகளும், 218 பயனாளிகளுக்கு ரூ.96.56 லட்சம் மதிப்பீட்டில் பால் தர பரிசோதனை கருவிகளும், சிறுபால் பண்ணை அமைப்பதற்காக ஒரு குழுவிற்கு ரூ.66 7. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 3 குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் கடனுதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் மாட்டுக்கடனாக 71 பயனாளிகளுக்கு ரூ.42.86 லட்சம் கடனுதவிகளும் என மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×