search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டு தேங்கிய இடங்களில் இந்தாண்டு  தேங்கவில்லை- அமைச்சர் கே.என்.நேரு
    X

    (கோப்பு படம்)

    கடந்த ஆண்டு தேங்கிய இடங்களில் இந்தாண்டு தேங்கவில்லை- அமைச்சர் கே.என்.நேரு

    • 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
    • 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.

    வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.

    கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×