என் மலர்
உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்த காட்சி.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையம் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
- தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
- திறப்பு விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செந்தில், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, அற்புதராஜ், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






