search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்
    X

    அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட காட்சி.

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

    • சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
    • அதை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் குடியிருக்கும் பொதுமக்களிடம் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.அதை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண் சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, சந்தனமாரி, ம.தி.மு.க. சார்பில் மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாநில தொண்டரணி செயலாளர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவண பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்களின் குறைகளை தீர்க்க வேண்டும். கட்ட பொம்மன் நகர் நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுரம் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை அமைச்சரின் உதவியாளர் கல்யாண சுந்தரம் குறிப்பெ டுத்துக்கொண்டார்.

    Next Story
    ×