search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 56,025 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
    X

    செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் பூங்கொடி உள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 56,025 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

    • அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க ப்பள்ளி மாணவ-மாணவி களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 951 மாணவ- மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1354 மாணவ- மாணவிகளுக்கும், என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,305 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி களிலும் காலை உணவு வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. அதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 53,715 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 2,310 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 1,062 பள்ளிகளைச் சேர்ந்த 56,025 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ-மாணவிகள், நகர்ப்புற ங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    இத்திட்டத்தின்படி பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படுகிறது. சமையல் மையப் பொறுப்பா ளர்க ளுக்கு அந்தந்த வட்டாரங்க ளில் தனித்தனி குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலை வர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய க்குழு தலைவர் மகேஸ்வரி முரு கேசன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளர்(சத்துணவு) சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவர் லாரன்ஸ், செட்டியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×