search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரார்த்தனை
    X

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்.


    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரார்த்தனை

    • நேற்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது.
    • பங்கு தந்தை குமார் ராஜா, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாதா படம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது. தொடர்ந்து பல்வேறு திருப்பலிகள் நடந்தன.

    இந்த நிலையில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை பனிமயமாதா ஆலயத்துக்கு சென்றார். பனிமய மாதாவுக்கு மாலை அணிவித்து வழிபட்டார். அவரை வரவேற்ற பங்கு தந்தை குமார் ராஜா, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாதா படம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உடன் இருந்தார்.

    Next Story
    ×