என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்க வேண்டும் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பல மினிபஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், ஆவுடையானூர், கடையம், பூலாங்குளம், கழுநீர்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் பல மினிபஸ்கள் அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் இயக்கிடாமல் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் தெரி விக்கின்றனர்.
உடனடி யாக அனுமதிக்கப் பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story