search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே ஆபத்தான படிக்கட்டுகளுடன் இயங்கும் மினி பஸ்
    X

    உடைந்த படிக்கட்டுகளுடன் இயக்கப்படும் மினிபஸ்சை படத்தில் காணலாம்.

    கடையம் அருகே ஆபத்தான படிக்கட்டுகளுடன் இயங்கும் மினி பஸ்

    • மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
    • கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கடையம்:

    பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.

    பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×