search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையம் சார்பில் வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் முனைவர் சோமசுந்தரம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

    சென்னை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கூடுதல் இயக்குனர் முத்துராமன் நிகழ்த்தினார்.

    விழாவில் அங்கமாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் மேட்டுப்பாளையம் வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையம் திறன் மேம்பாடு, தொழில் மேம்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அதிகாரி தாமோதரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். இதில் வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான பிருந்தாபாரதியின் புத்தாக்க படைப்பான நாற்றங்காலுக்கு தேவையான கரிம வளர்ச்சி ஊக்கி சந்தை படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களான கபினேஷ் மற்றும் கவுசல்யாவின் புத்தாக்க தொழில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

    மேலும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் வாயிலாக ஆதார நிதி காயத்ரி, சங்கீதா, அபிகுமார், பிருந்தா பாரதி ஆகியோருக்கு காசோலைகளாக வழங்கப்பட்டது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான தட்சணாமூர்த்திக்கு வங்கி மேலாளர் வனிதா நடராஜன் காசோலை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பார்த்திபன் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் செயல்பாடுகளையும் வளர்ச்சியும் பற்றி விவரித்தார். மேலும் மாணவர்களுக்கு வணிக மேம்பாட்டு மையத்தின் சார்பாக கிடைக்கப்பெரும் சேவைகளையும் திறன் மேம்பாட்டு பயிற்சிளையும் குறித்து பேசினார். முன்னதாக முனைவர் ஜூடு சுதாகர் வனவியல் துணைப் பேராசிரியர் வரவேற்றார் . வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் தொழில் மேலாளர் சி. காயத்ரி சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×