என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பார்வையாளர்கள் நியமனம்- சட்டசபை தொகுதி வாரியாக அறிவிப்பு
- தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பெரம்பூர்-எல்.எஸ்.எஸ்.மோகன் (துணைத்தலைவர், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு).
சென்னை:
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக பார்வையாளர்கள் விவரம் வருமாறு:-
பூந்தமல்லி-(தனி), ப.கணேசன் (தலைமைக் கழக வழக்கறிஞர்), ஆவடி-ஆர்.டி.ஏ.ஆதிசேஷன் (துணைச் செயலாளர், விவசாய அணி).
மதுரவாயல்- மாஸ்டர் பெ.சேகர் (செயலாளர் தொண்டர் அணி), அம்பத்தூர்-பி.டி.சி.ஜி.செல்வராஜ் (செயலாளர், தொழிலாளர் அணி), மாதவரம்-டாக்டர் நா.சந்திரபாபு (பொருளாளர், ஆதிதிராவிடர் நலக்குழு), ராதா கிருஷ்ணன் நகர்-நந்தனம் எஸ்.நம்பிராஜன், (இணைச் செயலாளர், இலக்கிய அணி), பெரம்பூர்-எல்.எஸ்.எஸ்.மோகன் (துணைத்தலைவர், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு),
கொளத்தூர்-வழக்கறிஞர் ஆர்.விடுதலை, (தலைவர் சட்டத்துறை), வில்லிவாக்கம்-பி.டி.சி.வெ.பாலு (துணைச் செயலாளர் தொழிலாளர் அணி), திரு.வி.க. நகர் (தனி)-மு.தம்பிதுரை (துணைச் செயலாளர், மீனவர் அணி), எழும்பூர் (தனி)-ரத்னா லோகேஸ்வரன் (மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்), ராயபுரம்-நவின் (துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி), துறைமுகம்-க.பிரபு (துணைச் செயலாளர், இளைஞர் அணி), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-சி.எச்.சேகர் (துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி) ஆயிரம் விளக்கு-டாக்டர் கலை கதிரவன் (துணைச் செயலாளர், மருத்துவ அணி),
அண்ணா நகர்-காசி முத்துமாணிக்கம் (செய லாளர், வர்த்தகர் அணி), விருகம்பாக்கம்-கோ.ஸ்டாலின் (துணைச் செயலாளர் அயலக அணி), சைதாப்பேட்டை-கோவி.லெனின், ஆலோசகர், (தகவல் தொழில்நுட்ப அணி), தி.நகர்-ப.அப்துல் மாலிக் (துணைச் செயலாளர் இளைஞர் அணி), மயிலாப்பூர்-கே.எஸ்.ரவிச்சந்திரன் (இணைச் செயலாளர் சட்டத்துறை), வேளச்சேரி மீ.அ.வைத்தியலிங்கம் (தீர்மானக்குழு செயலாளர்), சோழிங்க நல்லூர்-வி.பி.கலைராஜன் (செயலாளர், இலக்கிய அணி), பல்லாவரம்-எஸ்.மோகன் (இணைச் செயலாளர், மாணவர் அணி).
தாம்பரம்-தசரதன் (துணைச் செயலாளர், இலக்கிய அணி), செங்கல்பட்டு சி.பிரதீப் (துணைச் செயலாளர், பொறியாளர் அணி), ஆலந்தூர்-இரா.நரேந்திரன் (துணைச் செயலாளர், பொறியாளர் அணி).