என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
- 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
- 125-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டார வளமைய மேலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.
பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்து 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார்.
முகாமில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லா, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 75 மாற்றுத்தி றனாளி மாணவர்களும், 125 மாற்றுத்திறனாளி பெரியவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்று னர் சுதாகர் நன்றி கூறினார்.