என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ பேசிய காட்சி. அருகில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கோவில்பட்டியில் ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்பு
- வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
- விருதுநகரில் நிற்கும் ரெயில், கோவில்பட்டியில் நிற்காதா?. நிற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று துரை வைகோ பேசினார்.
கோவில்பட்டி:
துாத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயங்கும் வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டியில் நடந்தது. இதில் ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:-
வந்தே பாரத் ரெயில்
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் அதிவேக ரெயில் இயக்கப் படுகிறது என்று அறிவிப்பு வந்தபோது, தென்மாவட்ட மக்கள் அதிலும் இந்த பகுதி மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த ரெயில் நின்று செல்லும் இடங்களை அறிவித்தபோது அதிர்ச்சியடைந்தது நீங்கள் மட்டும் அல்ல, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் ஏமாற்றம் அடைந்தார்.
விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நிற்கும் ரெயில் கோவில்பட்டியில் மட்டும் நிற்கவில்லை. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்யாவை தொடர்பு கொண்டு வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், 24 மணி நேரத்தில் ம.தி.மு.க., சார்பில் துரை வைகோ (எனது) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத் தயும் அறிவித்தார்.
சொன்னதை செய்து முடிப்பவர் வைகோ. அதுதான் வைகோவுக்கும், பிற அரசியல் தலைவர்க ளுக்கும் உள்ள வித்தியாசம். வந்தே பாரத் ரெயில் போராட்ட களம் உருவெ டுத்துள்ளது. பா.ஜனதா மத்திய மந்திரி முருகன் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விருதுநகரில் நிற்கும் ரெயில், கோவில்பட்டியில் நிற்காதா?. நிற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆர்ப்பாட்டம் முடிந்தபின் ரெயில் நிற்கும் என்ற அறிவிப்பு கூட வரலாம். அதை பிற அரசியல் கட்சிகள் நாங்கள் கொண்டு வந்தது என்று கூட கூறலாம். அதைப்பற்றி கவலை இல்லை.
இவ்வாறு துரை வைகோ பேசினார்.
கூட்டத்தில் தலைமை நிலைய பொதுச்செயலாளர் ராசேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வாசுதேவ நல்லுார் சதன் திருமலை குமார், சாத்துார் ரகுராமன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், ஒழுங்கு நடவ டிக்கைக்குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், மகளிரணி செயலாளர் மல்லிகா, ராம நாதபுரம் மாவட்ட செயலா ளர் சுரேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் வேல்முருகன், கம்மாபட்டி ரவிச்சந்திரன், சாத்தூர் கண்ணன், மதுரை மாவட்ட செயலாளர் முனியசாமி, தென்காசி மாவட்ட செயலா ளர் சுதா பாலகிருஷ்ணன், இளைஞரணி செயலா ளர்கள் சரவணன், கேசவ நாராயணன், மாரிசாமி, கோவில்பட்டி நகர செய லாளர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






