search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேயர்  நடவடிக்கை - இன்று முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமல்
    X

    கருத்த பாலம் பகுதியில் மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேயர் நடவடிக்கை - இன்று முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமல்

    • போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொதுமக்கள் இடையூரின்றி செல்லவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் ,போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கருத்த பாலம் போக்குவரத்திற்கு குறுகியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த னர்.

    இது குறித்து மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வுகள் மேற்கொண்டார்.

    பின்னர், அந்த ஒடைப் பாலத்தை அகல படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரி களுக்கு அவர் உத்தர விட்டார்.

    மேலும் பழைய மாநகராட்சி எதிர்புறம் நடைபெற்று வரும் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளையும் மேயர் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொதுமக்கள் இடையூரின்றி செல்லவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. சத்தியராஜ் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளர், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    எட்டையாபுரம் சாலை யில் இருந்து வரக்கூடிய மினி பஸ்கள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 4-ம் ரயில்வே கேட் மேம்பாலம் மேல் வழியாக செல்லாமல் சர்வீஸ் ரோடு வழியாக செல்ல உத்திரவிடப் பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலைய வெளிப்பகுதிகளில் பஸ் களை நிறுத்தக்கூடாது என்றும் நகரின் முக்கிய சாலைகளில் பொது போக்கு வரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலைகளில் நிறுத்தக்கூடாது என்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று முதல் உடனடியாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×