search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் நேரில் ஆய்வு
    X

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் நேரில் ஆய்வு

    • மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ரெயில் நிலைய பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதனை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர் குட்டத்து மாடசாமி கோவில் அருகில் உள்ள குளம் மாநகராட்சி சார்பில் புனர மைக்கப்பட்டது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும்

    அப்போது அவர் கூறுகையில், இந்த பகுதியில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழி வகை செய்யப் பட்டுள்ளது. கடுமையான கோடை காலத்திலும் குளத்தில் நீர் இருப்பதை பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வருங் காலங்களில் குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும் என்றார்.

    தொடர்ந்து தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ெரயில் நிலைய பொது மக்களின் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. அதனை மேயர் நேரில் பார்வையிட்டார். அப்போது எட்டையாபுரம் சாலை, ஜெயராஜ் சாலைக்கு செல்லும் ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக ரெயில்வே பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு விரைவில் நெடுஞ் சாலைதுறை மூலமாக புதிய தார்ச்சாலைகள், மாநக ராட்சி சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் உத்தரவு

    அப்போது அந்த பாலத்தின் கீழ் உள்ள பாதையில் பொது போக்கு வரத்திகு இடையூராக இருந்த பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட மேயர் இரவு நேரத்திலும் சாலை யை பயன்படுத்துவதற்கு வசதியாக மின் விளக்குகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாநகர தி.மு.க. துணை செயலா ளரும், கவுன்சிலருமான கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×