search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடனுதவி வழங்கியதில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாவட்டம்
    X

    கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் லலிதா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    கடனுதவி வழங்கியதில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாவட்டம்

    • 77 பயனாளிகளுக்கு ரூ. 167 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • 7 பயனாளிகளுக்கு ரூ. 106 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம், (யு.ஒய்.இ.ஜி.பி.), புதிய தொழில் முனைவோர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்க ளுக்கான முறைப்படுத்தும் திட்டம்;-

    (பி.எம்.எப்.எம்.இ) ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி,) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 114 பயனாளிகளில் 176 பயனாளிகளுக்கும், இதன் நிதி இலக்கீடான ரூ. 331.50 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ. 361.27 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 77 பயனாளிகளுக்கு ரூ.167.55 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.), திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 42 பயனாளிகளில் 32 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.34 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.32.9 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 30 பயனாளிகளுக்கு ரூ.29.59 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    புதிய தொழில் முனை வோர் வேலைவாயப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 17 பயனாளிகளில் இதுவரை 13 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.168 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.456.95 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 7 பயனாளிகளுக்கு ரூ.106.33 இலட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.எப்.எம்.இ.) திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20.94 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி.) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் ஜனவரி மாதம் வரை 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பொதுமேலாளர் மாவட்டதொழில் மையம், 2-ம் தளம், செந்தில் பைப்ஸ் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை அல்லது தொலைபேசி எண்: 04364-212295, கைபேசி எண்: 9788877322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றார்.

    Next Story
    ×