என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    • மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
    • புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும்,

    புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு நிர்வாகிகள் குருசாமி, சரவணன், வசந்தி, மாநகர குழு நிர்வாகிகள் அன்பு, கரிகாலன், ராஜன், கோஸ்கனி, அப்துல்நசீர், ராஜன், காதர்உசேன், அருண்குமார், வின்சி லாராணி, பைந்தமிழ், 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×