search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோவையில் மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்

    • மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும் தனித்தனியே விதிகளை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுகிறது
    • மார்க்கெட்டுக்குள் சுங்கவரி இரண்டு மடங்காக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி பகுதியில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு அங்கு காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள எம்.ஜி ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு பதிலாக சில்லறை விற்பனை நடைபெற்று வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

    மேலும் மார்க்கெட்டுக்குள் சுங்கவரி இரண்டு மடங்காக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்கெட்டில் கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வியாபாரிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாராயணன் கூறும்போது, மார்க்கெட்டில் காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரெண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சூழலில் மொத்த சந்தையில் சில்லறை வியாபாரத்தையும் தொடங்கியுளளதால் அண்ணா காய்கறி சந்தையை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

    கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும் தனித்தனியே விதிகளை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றுகிறது என்றார்.

    வியாபாரிகளின் இந்த உள்ளிருப்பு போராட்டம் காரணமாக அண்ணா தினசரி காய்கறி சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×