search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனதின் குரல் நிகழ்ச்சியில் 1000 பேருக்கு மீன் சாப்பாடு விருந்து- அண்ணாமலையும் பொதுமக்களுடன் சாப்பிட்டார்
    X

    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் 1000 பேருக்கு மீன் சாப்பாடு விருந்து- அண்ணாமலையும் பொதுமக்களுடன் சாப்பிட்டார்

    • மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது.
    • பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பா.ஜனதாவினர் இன்று திருவிழா போல் கொண்டாடினார்கள்.

    சென்னை மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் மீன் சாப்பாடு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர்.

    மாநில செயலாளர் சதீஷ்குமார் என்பவர் மனைவி சுபசித்ரா. இவரும் கட்சி பொறுப்பில் இருக்கிறார். தனியார் பள்ளியில் ஆசிரியை வேலைபார்த்த சுபசித்ரா கட்சி ஈடுபாடு காரணமாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேலையை ராஜினாமா செய்தார். தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

    அதன்பிறகு மீன் உணவகம் என்ற பெயரில் சிறிய உணவகத்தை தொடங்கினார். அதுவும் கொரோனாவுடன் மூடப்பட்டது. வாழ்க்கையோடு போராடினாலும் கட்சிக்காகவும் போராடும் இந்த தம்பதி இன்று விருந்துக்கும் சமையல்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து சமையலில் ஈடுபட்டார்கள்.

    மீன்களை கழுவி சுத்தப்படுத்துதல், உணவு தயாரித்தல் என்று உணவு கூடமே பெண்கள் கைவண்ணத்தில் களை கட்டியது. மீன் விருந்து பற்றி சுபசித்ரா கூறியதாவது:-

    தாமரை சொந்தங்களுக்கு என் கையினால் சமைத்து விருந்து கொடுக்க ஆசை. எனவே சமையல்காரர்களை அழைக்கவில்லை. நாங்களே செய்கிறோம்.

    நண்டு சூப், இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல், பாறை மீன் குழம்பு தயார் செய்துள்ளோம் என்றார்.

    விருந்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, நடிகை நமீதா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகளும் பொதுமக்களுடன் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டனர்.

    சூப், வறுவல், தொக்கு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டனர். சுமார் 1000 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

    Next Story
    ×