என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் இருந்து ரூ.5 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
- சிறிது தூரம் சென்ற பிறகு சாக்கம்மாள் பின்னால் வந்த மர்ம நபர் அவர் கையில் இருந்த பணப்பையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
- சாக்கம்மாள் திருடன், திருடன் என்று அலறினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கம்மாள் (வயது35). இவர் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களிடையே வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்து வதற்காக சாக்கம்மாள் பாலக்கோட்டிற்கு பஸ்சில் வந்தார். அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் வந்த அவர் கையில் பணப்பையுடன் அங்குள்ள வங்கிக்கு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
சிறிது தூரம் சென்ற பிறகு சாக்கம்மாள் பின்னால் வந்த மர்ம நபர் அவர் கையில் இருந்த பணப்பையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான். உடனே சாக்கம்மாள் திருடன், திருடன் என்று அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உடனே அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சாக்கம்மாள் மற்றும் பொதுமக்கள் பிடிப்பட்ட மர்ம நபரை பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் (46) என்பவர் சாக்கம்மாளிடம் பணத்தை திருடினார் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






