என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்க பணிக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியவர் கைது
    X

    சாலை விரிவாக்க பணிக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியவர் கைது

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திடீரென்று மாயமானது.
    • எர்ரனஅள்ளியைச் சேர்ந்த ஆஞ்சநேயர் திருடி வந்து பாத்திரகடையில் விற்றது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் செல்லும் சாலை 4 வழி சாலையாக மாற்றுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அதற்காக தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகின்றன. இந்த பணிகளுக்கான டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தில் பாலக்கோடு சொக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது30) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் பாலக்கோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலையில் விளக்குகள் அமைப்பதற்கான வயர்கள், ஜாக்கி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திடீரென்று மாயமானது. இதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பாலக்கோடு அருகே மூக்கம்பாடி பாத்திரக்கடை ஒன்றில் அந்த பொருட்கள் இருப்பதும், அந்த பொருட்களை எர்ரனஅள்ளியைச் சேர்ந்த ஆஞ்சநேயர் (52) என்பவர் திருடி வந்து பாத்திரகடையில் விற்றது தெரியவந்தது. உடனே போலீசார் ஆஞ்சநேயரை கைது செய்து பாத்திர கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×