என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தபால் அனுப்பும் போராட்டம்
Byமாலை மலர்12 April 2023 2:44 PM IST
- கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
- 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லை:
மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முக சுந்தரராஜ் நோக்கங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தி.மு.க. அரசு பதவியேற்ற பின் வழங்கிய 4 தவணை அகவிலைப்படியை மத்திய அரசுபோல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் நல்லபெருமாள் நன்றி கூறினார்.
Next Story
×
X