என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளை எருமைகடா மைதானத்தில் 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா
- 5 கோவில்களில் வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது.
- எருமைகடா மைதானத்தில் மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகா சிவராத்திரி விழா
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி முக்கிய சிவாலயங்களான மைலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில், தஞ்சை பிரக தீஸ்வரர் கோவில், கோவை பட்டீசுவரர் கோவில், திருவண்ணாமலை அரு ணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களிலும் வருகிற 18-ந் தேதி ( சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளை ஆயிரத்தம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறும் எருமைகடா மைதானத்தில் வருகிற 18-ந் தேதி மாலை 4 மணி முதல் 19-ந் தேதி அதிகாலை 6 மணி வரை மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






