என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    Next Story
    ×