என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ்
  X

  நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டத்தில் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
  • அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

  மதுரை

  மதுரை டவுன், மதுரை புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர். பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகங்களான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் (மாஸ்டர் வீவர்) பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக அவர்கள் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

  மாற்று வேலை வாய்ப்பின்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 30 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் 20 சதவீமும் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இதுகுறித்து ஐக்கிய குழு நிர்வாகிகளான ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோபிநாத், பி.எம்.எஸ்.செயலாளர் சுதர்சன், ஜனதாதளம் பொருளாளர் ரவீந்திரன், ஏ.டி.பி. இணைச் செயலாளர் பத்மநாபன், சி.ஐ.டி.யு. ஈஸ்வரன்,

  எல்.பி.எப்.துணைத் தலைவர் ஜெகநாதன், துணைச் செயலாளர் தாமோதரன் ஆகியோருக்கும், நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளான மோதிலால், ராமபிரமம், கோவர்த்தனன், சுந்தர கோபால், சுப்பிரமணியன், சுரேஷ்பாபு, சிவநாத், பரமேசுவரன். சரவணன் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டது.

  அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு (2023) தீபாவளி வரை அமலில் இருக்கும் என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

  Next Story
  ×