search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
    X

    புனரமைப்பு பணிகளை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பார்வையிட்டார்.

    காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

    • காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • சிற்பங்கள் மற்றும் ஒவி யங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    தென்னிந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மதுரை காந்தி மியூசியம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப் பிக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதனடிப்படையில் காந்தி மியூசியத்தில் புனர மைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணி களை அமைச்சர் வெள்ளக் ேகாவில் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இந்தியாவின் பழமையான அருங்காட்சிய கத்தையும், உலக தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு கருத்தரங்க கூடங்கள், ஆய்வரங்கங்கள், பார்வையாளர் அரங்கம் மற்றும் நூலகத்தையும் அமைச்சர் ஆய்வு ெசய்தார்.

    சங்கத்தமிழ் காட்சிக் கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஒவியங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×