search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்-இணை ஆணையர்
    X

    விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் பேசிய காட்சி. அருகில் மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்-இணை ஆணையர்

    • வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

    இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-

    கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×