search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் மழைநீர் புகுந்ததால்  மாணவர்கள் அவதி
    X

    பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி

    • பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் கருப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்று சுவரை ஒட்டி மேற்கு பக்கம் பெரியாறு கால்வாயின் 12-வது கண் பிரிவு கிளை பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து வீடு மற்றும் கழிவறைகள் கட்டி உள்ளதால் பாசன கிளை கால்வாயின் அகலம் சுருங்கியது. தற்போது பெய்யும் மழையால் கிளை கால்வாயில் மழைநீர் வரத்து அதிகமாகி தண்ணீர் செல்ல முடியாமல் இடிந்து கிடந்த பள்ளி சுற்று சுவர் வழியாக மழை நீர் பள்ளி வளாகத்திற்கு புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமையாசிரியை வீட்டு அனுப்பி வைத்தார். மற்ற வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கம்போல் வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ. மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த அவலநிலையை போக்க மாவட்ட நிர்வாகம் கிளை கால்வாய் ஆக்கிமிப்புகளை அகற்றி சேதமான பள்ளி சுற்றுசுவர் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×