என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ்சில் முண்டியடித்து ஏறும் பள்ளி மாணவ, மாணவிகள்.
போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள்
- போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர்.
- பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலூர்
மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ளது சேக்கிபட்டி. இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
சேக்கிபட்டி, பட்டூர், ஆலம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்பட சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லவும், பின்னர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பவும், அந்த நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை.
இதனால் அவ்வழியே வரும் வெளியூர் பஸ்களில் ஏறி படிக்கட்டு களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வரு கின்றனர்.
தனியார் பஸ்களும் லாபம் கருதி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வந்து நிற்கும் போது மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முண்டியடித்து ஏறு கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் இது குறித்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






