என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாநில அளவிலான ஆக்கி போட்டி
  X

  மாநில அளவிலான ஆக்கி போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
  • முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.

  வாடிப்பட்டி

  வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ராஜூ நினைவு அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி, திண்டுக்கல் அணி, வாடிப்பட்டி உள்பட 11 அணிகள் மோதுகின்றன.

  தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ராஜா வரவேற்றார். எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளை சாமி, சரவணன், சந்திர மோகன், ராமசாமி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.

  Next Story
  ×