என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு 29-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கம்
- மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு 29-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ரெயில் இயக்கம், தகவல், Train operation, information,
மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும். கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்கும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Next Story






