என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாலிபருக்கு அரிவாள்வெட்டு
  X

  வாலிபருக்கு அரிவாள்வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
  • பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

  திருமங்கலம்

  திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரினை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த சிவகார்த்தி கேயன்(வயது27) உள்ளிட்ட 7 பேர் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

  இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவகார்த்திகேயன் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மேலஉரப்பனூர் திரும்பினார். அவர் நேற்றுஇரவு கிராமத்தில் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சிவகார்த்திகேயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

  இதில் தலை, கை, கால்களில் படுகாயமடைந்த சிவகார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  Next Story
  ×