search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி
    X

    கத்திபோடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி

    • சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.
    • கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மல்லிகை கரகம் எடுத்து செல்லும்போது கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு திருவிழாவில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் நடைெபற்றது.

    விழாவை முன்னிட்டு டி.குன்னத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் மக்கள் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    மல்லிகை கரகம் எடுத்து வரும்போது பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம் பூசி கொண்டு கத்தியை கைகளால் பல மாக தட்டியும் தங்களது உடலில் கத்தியை வைத்து தன்னைத் தானே கீறிக் கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். துஷ்ட சக்திகள் அண்டவிடாமல் தடுக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி கொண்டு தன்னை தானே வெட்டி கொண்டு மல்லிகை கரகத்திற்காக ரத்த காணிக்கை கொடுப்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று நடந்த கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×