search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
    X

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

    • மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி அணிவகுப்பு நடத்துவதற்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை (6-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் செயல்பட்டனர்.

    ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், மகேஷ், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி தலைவர் அழகர்சாமி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×