என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை
- மதுரையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.
- தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி நிர்வாகி விஜயசரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், முத்துமாரி என்பவரிடம் சையது ஆரிப், மனைவி சஹானா பானு ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக குழந்தையைப் பெற்று உள்ளனர்.
இதற்கு ஷமீம்பானு என்பவர் புரோக்கராக இருந்து செயல்பட்டு உள்ளார். மேற்கண்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட முத்துமாரி, ஷமீம்பானு, சையது ஆரிப், அவரது மனைவி சகானா பானு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






