search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தகுதித்தேர்வு
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு ஏறுதல் போட்டியில் பங்கேற்ற வாலிபர்கள்.

    சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தகுதித்தேர்வு

    • மதுரையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தகுதித்தேர்வில் 525 பட்டதாரிகள் பங்கேற்றனர்.
    • இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 197 மையங்களில் நடைபெற்ற இந்த எழுத்து தேர்வை 1 லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர்.

    இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை மைதானங்களில் நடந்து வருகிறது.

    மதுரையில் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி திறன் தேர்வுகள் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 525 பேர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் உடல் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இந்த நிலையில் 2-வது நாளான இன்று அவர்களுக்கான உடல் திறன் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. குண்டு எறிதல், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×