search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி
    X

    மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி

    • பள்ளப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • 1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் விழாக் குழு தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் திருவிழா வருகிற 15-ந்தேதி அன்று நடத்த முடிவு செய்துள்ளனர். திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முக்கியமாக வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.

    1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

    வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரி க்கையை பரிசீலிக்காமல் ெகாரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.

    எனவே பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வருகிற 15-ந்தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள்சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என்று கூறினார்.

    இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×