என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு
- மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
- இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம், ஆக.6-
75-வது சுதந்திரதினத்தையொட்டி நாடுமுழுவதும் மாணவிகள் பணிபுரிந்த செயற்கை கோள் மென்பொருள் தயாரிப்பு பணியில் திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் சாதனை படைத்தனர்.
11-ம் வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடி தலைமையில் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கின்றனர்.
சாதனை மாணவிகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் உத்தரவுபடி நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் பள்ளிக்கு சென்று பாராட்டினர்.
மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் ஊக்கத்தொகை வழங்கியும் நகராட்சி தலைவர் பாராட்டினார். இதில் இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story