search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் பொறுப்பேற்பு
    X

    கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பதவி ஏற்றார். அருகில் இந்திய மற்றும் கானா நாட்டின் உயர் அதிகாரிகள் உள்ளனர்.

    கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் பொறுப்பேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பொறுப்பேற்றார்.
    • இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ., என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று கானா துணை தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    கானாவில் உள்ள அக்ராவில் உலக தினை தினம் கொண்டாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட் குழும இயக்குநர் மற்றும் வணிக மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டனர்.

    வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் பெரியசாமி கூறியதாவது:-

    மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×