search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் நாளை புறப்பாடு
    X

    மதுரை-அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் நாளை புறப்பாடு

    • மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
    • இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    மதுரை

    மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) புறப்படுகிறது.

    நாட்டின் பாரம்பரிய மிக்க வரலாற்றுச் சிறப்புடைய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் ''பாரத் கவுரவ்'' என்ற ஆன்மிகச் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அனுபவம் மிக்க சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    இதன் தொடர்ச்சியாக 7-வது சுற்றுலா ரெயில், மதுரையில் இருந்து அமிர்தசரசுக்கு நாளை இயக்கப்படுகிறது. கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் தெலுங்கானா மவுலாளி, ஜெய்ப்பூர்,ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைத்து இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    கூடல்நகர்- அமிர்தசரஸ்-கூடல்நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரெயில் (06905/06906) கூடல் நக ரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திரு வனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று வருகிற 6-ந் தேதி மவுலாளி, 8-ந் தேதி ஜெய்ப்பூர், நவம்பர் 9-ந் தேதி ஆக்ரா, 10-ந் தேதி டெல்லி, 11-ந் தேதி அமிர்தசரஸ், 13-ந் தேதி கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைக்கிறது.

    பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வருகிற 16-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கூடல்நகர் வந்து சேருகிறது.

    Next Story
    ×