என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்த்திக் பாண்டியன்
சிறுமியை கடத்திய வாலிபர் கைது
- மதுரையில் சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறினார்.
மதுரை
மதுரை பெத்தானியா புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மாயமானதாக தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் அந்த சிறுமி அடுத்தநாள் காலை மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த சிறுமி கூறுகையில், நான் என்.எஸ்.கே.வீதியில் வசிக்கும் அரியன் மகன் கார்த்திக் பாண்டியன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தேன். இந்த நிலையில் அவர் நேற்றுமாலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் என்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக என கூறினார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கார்த்திக் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






