search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேது சமுத்திர திட்டம் செயல்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்
    X

    மாநாட்டில் தி.க.தலைவர் வீரமணி பேசினார். இதில் டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகி அக்ரி.கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    சேது சமுத்திர திட்டம் செயல்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்

    • சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
    • மதுரையில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.

    இதில் தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் அழகிரி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீ.வீரமணி பேசியதாவது:-

    சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம் மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பா.ஜ.க. பிடிவாதம் பிடிக்கிறது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டிருப்பதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஈரோட்டில் பிரசாரம் தொடங்கப்படும்.

    அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். குழந்தையை பெற்றெடுத்து ஊனமாக்கியது போல் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது. சேது சமுத்திர திட்டத்திற்கு மத சாயம் பூசக்கூடாது என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர்.

    Next Story
    ×